சென்னை: ஜீ 5 மற்றும் ராடான் மீடியா ஒர்க்ஸ் - ராதிகா சரத்குமார் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் பரத், கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப் சீரிஸ் 'தலைமை செயலகம்' (Thalaimai Seyalagam). இந்த வெப் சீரிஸ் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சரத்குமார், பரத், நிரூப், நடிகைகள் ராதிகா ,சரத்குமார், தர்ஷா குப்தா, இயக்குநர்கள் வசந்தபாலன், சந்தான பாரதி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நடிகர் சரத்குமார், "நான் பேச எதுவும் கிடையாது. வசந்தபாலன் சொல்லும்போது மொத்த வாழ்வியல், அரசியல் எல்லாவற்றையும் அவ்வளவு சூப்பரா பேசிட்டாரு. அவர் ரொம்ப டெடிக்கேட்டிவ்.
தமிழ்நாட்டில் நல்ல முன்னேற்றம் இருக்கத்தான் செய்கிறது. அரசியல் என்றால் என்ன? அதில் உள்ள நுணுக்கங்கள் என்ன? சேவை செய்யும்போது நடைமுறையில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதையும் அவர் சிறப்பாக சொல்லி இருக்கிறார்.
இந்த கதையில் நீங்க தான் நடிக்க வேண்டும் என்று வசந்தபாலன் என்னிடம் சொன்னார். நீங்கள் தலைமை செயலகம் பற்றி எழுதுங்கள். 33 சதவீதத்துக்கே இப்படி பேசுகிறார் என்றால் 50 சதவீதம் கொடுத்தால் என்ன பண்ணுவாங்கன்னு தெரியல என்று ஜாலியாக ராதிகாவை கலாய்த்து பேசியவர், பெண்களை மீறி வீட்டில் எதுவும் நடக்காது. தைரியமாக உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய சரத்குமார், "தலைமை செயலகம் போறதே கஷ்டம். டிராபிக் நிறைய ஆகிவிட்டது. அதை தான் சொன்னேன். தலைமை செயலகம் போகிற ரோட்டில் மெட்ரோ வேலை நடைபெறுகிறது என்று அதை தான் சொன்னேனே தவிர நீங்கள் வேறு மாதிரி எதுவும் நினைக்க வேண்டாம்.
இந்த பணியை இவர் தான் செய்ய வேண்டும் என்று நினைத்தால் வெற்றி பெற முடியாது. சைக்கிளில் பேப்பர் போட்டிருக்கிறேன். ரிப்போர்ட்டராக இருந்திருக்கிறேன். டேபிள் துடைத்தால் கூட தவறில்லை. கடின உழைப்பு தான் முக்கியம்" என்று சரத்குமார் கூறினார்.
அதைத் தொடர்ந்து பேசிய நடிகை ராதிகா சரத்குமார், "தலைமை செயலகம். வெப் சீரிஸ் துவங்கியதில் இருந்து அந்த பயணம், தலைமை செயலகம் போற மாதிரி போராட்டமாக தான் இருந்தது. கடைசி வரை இந்த கதையில் காம்ப்ரமைஸ் ஆகக்கூடாது என்று நினைத்தோம். அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தது இயக்குநர் வசந்தபாலன். வெப் சீரிஸுக்கு வேறு ஒரு நரேட். அது கொஞ்சம் வித்தியாசமானது.
இதுவரை சினிமாவில் நான் அதை பண்ணவில்லை என்று வசந்தபாலனுக்கு நன்றி தெரிவித்தவர். சினிமாவில் இருப்பதால் சக கலைஞர்களின் கஷ்டம் புரியும். நான் சினிமாவில் நிறைய பேரை பார்த்துவிட்டேன். அதில் கிஷோர் ரொம்ப டெடிக்கேட்டிவா இருப்பார். ஆனால் அவரை பிடிப்பது தான் கஷ்டம். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் - நாட்டாமை இல்லாமல் எதுவும் நடக்காது இங்க.
அவர் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை பார்த்துவிட்டார். ஆனால், இந்த வெப் சீரிஸ் அவருக்கே சேலஞ்சாக இருந்தது. கஷ்டம் என்று இல்லை. 8 எபிசோட்ஸ் என்பது கிட்டத்தட்ட 2, 3 படம் மாதிரி. பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைப்பது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. முதல் ஒரிஜினல் ஓடிடி ( சிறகுகள்) நாங்கள்தான் செய்தோம்" என்று பேசினார் ராதிகா சரத்குமார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு ராதிகா சரத்குமார் பதிலளித்தார்.
அப்போது அவர், "தமிழ்நாட்டில் உள்ள எம்எல்ஏக்களில் 12 பேர் தான் பெண் எம்எல்ஏக்கள். 2 பேர் மட்டும்தானஅ பெண் அமைச்சர்கள். அரசியலில் பெண்கள் முன்னேற முடியாமல் யார் தடுக்கிறார்கள்? என்று கேட்கிறீர்கள். சில நேரங்களில் பெண்கள் சூழ்நிலையை பார்த்து பின்வாங்கி விடுகிறார்கள் என்பதுதான் இதற்கு என் பதில்.
எம்.பியாக போட்டியிடுகிறீர்கள்... தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். ஒரு ஆணிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா? ஏன் வேலை செய்து கொண்டே அவர்கள் எம்.பி, எம்.எல்.ஏவாக இருக்கும்போது நாங்கள் இருக்கமாட்டோமா? இருப்போம். எல்லா பணியையும் திறம்பட செய்வோம், அதனால்தான் ஜெயலலிதாவை நான் ரொம்ப அட்மையர் பண்ணுவேன். அவர் என்ன நினைப்பாரோ அதைதான் செய்வார். அதுதான் எனக்கு பிடிக்கும்" என்று கூறினார் ராதிகா சரத்குமார்.
இதையும் படிங்க: கோழைகளின் வார்த்தைகளை நம்பாதீர்கள் - பார்த்திபனிடம் மன்னிப்பு கேட்க இயக்குநர் மிஷ்கின்!