சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான மேகா ஆகாஷ், தமிழில் பேட்ட திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சிம்புவுடன் 'வந்தா ராஜாவாதான் வருவேன்', தனுஷ் உடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இடம்பெற்ற 'மறுவார்த்தை பேசாதே' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, இவர் நடித்த 'யாதும் ஊரே யாவரும் கேளீர்', 'வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் இவர் நடித்த 'மழை பிடிக்காத மனிதன்' படம் வெளியானது. இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 23) மேகா ஆகாஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.