சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி தட்டில் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல நடிகை சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி அறிமுகமாகி விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன், ரெமோ விஜய்யுடன் பைரவா, சர்கார், ரஜினியுடன் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்தார்.
நாக் அஷ்வின் இயக்கத்தில் சாவித்ரி வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். மேலும் அந்த படத்திற்கு தேசிய விருது வென்றார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது நீண்ட கால நண்பரான ஆண்டனி தட்டில் என்பவருக்கும் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடைபெற்ற நிலையில், அதில் திரைப் பிரபலங்கள் விஜய், த்ரிஷா, கல்யாணி ப்ரியதர்ஷன், மாரி செல்வராஜ், சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்று திருமண தம்பதியை வாழ்த்தினர்.
இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் திரைப்பட புரமோஷனில் கழுத்தில் தாலியுடன் பங்கேற்றார். இது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்நிலையில் தனது கணவர் ஆண்டனி தட்டில் குறித்தும், காதல் வாழ்க்கை குறித்தும் கீர்த்தி சுரேஷ் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசியுள்ளார்.