தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இந்த தடவை மிஸ் ஆகாது.. எமர்ஜென்சி ரிலீஸ் அப்டேட் வெளியிட்ட கங்கனா ரனாவத்! - EMERGENCY RELEASE DATE - EMERGENCY RELEASE DATE

Kangana Ranaut: நடிகை கங்கனா ரனாவத் நடித்து தயாரித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.

எமர்ஜென்சி போஸ்டர்
எமர்ஜென்சி போஸ்டர் (credits - Kangana Ranaut Instagram page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 7:31 PM IST

ஹைதராபாத்:நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் நடித்துள்ள புதிய திரைப்படம் எமர்ஜென்சி. இத்திரைப்படத்திற்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மேலும், ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும், கங்கனா ரனாவத்தின் மணிகர்னிகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் அனுபம் கெர், மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன், ஷ்ரேயாஸ் தல்படே, விஷக் நாயர் மற்றும் மறைந்த சதீஷ் கௌஷிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில அரசியல் காரணங்களுக்காக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில், எமர்ஜென்சி திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு கங்கனா அறிவித்துள்ளார். போஸ்டரின் கீழ் சுதந்திர இந்தியாவின் இருண்ட அத்தியாயத்தின் 50வது ஆண்டின் தொடக்கம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:காந்தாரா கையில் 'கல்கி 2898 AD' புஜ்ஜி வாகனம்.. வெளியான மாஸ் கிளிக்ஸ்! - Rishab Shetty drives Kalki 2898 AD

ABOUT THE AUTHOR

...view details