சென்னை:வாஸ்கோடகாமா படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் நகுல், ஷாந்தனு, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், அறிவழகன், நடிகைகள் தேவயானி, அர்த்தனா பினு, பாடகர் ஆன்டனிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய தேவயானி, "ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. வித்தியாசமான பாணியில் பாடல்கள் வந்திருக்கிறது. என்டர்டெயின்மெண்ட் படம் இது. நகுல் பற்றி நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. பாய்ஸ், காதலில் விழுந்தேன் படத்தில் அவன் திறமையைப் பார்த்து வியந்து போனேன். அவனுக்கு நல்ல கதை, இயக்குநர், ஸ்கிரிப்ட் தேவை. அவனுக்கான அந்த நேரம் வர வேண்டும். மேலும், என் தம்பி என்பதற்காக சொல்லவில்லை.
அக்கா - தம்பி இருவரும் ஒரே துறையில் இருப்பது ரொம்ப அபூர்வமானது. இந்த நேரத்தில் எங்கள் அப்பா, அம்மா இருந்தால் ரொம்ப சந்தோசமாக இருப்பாங்க. நாங்கள் பண்ணும் ஒவ்வொரு விஷயமும் அவங்களுக்கு போய் சேர வேண்டும். எப்போதும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். இன்னும் நிறைய படங்கள் பண்ணி உன்னை நீ நிரூபிக்க வேண்டும்.