தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கையில் கட்டுடன் கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் தங்க மயிலைப் போல் ரேம்ப்வாக் செய்த ஐஸ்வர்யா ராய்! - Aishwarya Rai in Cannes 2024 - AISHWARYA RAI IN CANNES 2024

Aishwarya Rai Bachchan: பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 77வது கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய், தங்கப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரத்யேக உடையுடன் ரேம்ப்வாக் செய்தார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படம்
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படம்ல் (credits - AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 7:35 PM IST

ஹைதராபாத்: பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 77வது கேன்ஸ் திரைப்பட விழா, கடந்த மே 14ஆம் தேதி தொடங்கியது. இதில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகர்கள், நடிகைகள் வருடா வருடம் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்ட நிலையில், பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய், கையில் கட்டுடன் 'கேன்ஸ் 2024' விழாவில் கலந்து கொண்டார்.

இந்த சிவப்பு கம்பளம் நிகழ்வில், பிரபலமாக இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டு ரேம்ப்வாக் செய்வர். அதன்படி, நடிகை ஐஸ்வர்யா ராய் தங்கப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரத்யேக உடையுடன், கையில் கட்டுடன், மயில் தோகையைப் போல் ரேம்ப்வாக் செய்தார். இவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 20 ஆண்டுகளாக தவறாமல் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மகள் ஆராத்யாவுடன் மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"அது என்னோட வாய்ஸ் இல்லை" - நடிகர் கார்த்திக்குமார் போலீஸ் துணை ஆணையரிடம் புகார்! - Actor Karthik Kumar Complained

ABOUT THE AUTHOR

...view details