தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு? வைரல் வீடியோவுக்கு வைரஸ் காய்ச்சல் காரணமா? - ACTOR VISHAL HEALTH UDDATE

மேடையில் பேசிய போது நடிகர் விஷாலின் கைகள் நடுக்கம் எடுப்பது போன்ற வீடியோவை பலரும் பகிர்ந்த நிலையில், இதற்கான காரணம் வைரஸ் காய்ச்சல்

நடிகர் விஷால், அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
நடிகர் விஷால், அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 6, 2025, 6:16 PM IST

Updated : 8 hours ago

சென்னை: தமிழ் சினிமா வட்டாரங்களில் சென்னை அப்போலோ மருத்துவமனை பெயரில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவச் சீட்டு ஒன்றில் நடிகர் விஷாலுக்கு வைரல் காய்ச்சல் இருப்பதாகவும், அவர் முழுமையான ஓய்வு எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி 6ம் தேதியிடப்பட்ட இந்த மருத்துவச் சீட்டில் மருத்துவர், ஆர்.எஸ்.ராஜ்குமார் என்பவர் கையெழுத்திட்டுள்ளார்.

இருப்பினும் விஷால் தரப்பிலோ , மருத்துவமனை தரப்பிலோ அதிகாரப்பூர்வமாக இந்த உடல்நிலை குறித்த தகவலை ஏற்றுக் கொள்ளவோ, மறுக்கவோ இல்லை. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜ ராஜா திரைப்படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த திரைப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பங்கேற்றார். உதவியாளர் உதவியுடன் மேடையில் ஏறிய விஷால் நடுங்கும் கைகளுடன் மைக்கை பிடித்துப் பேசினார். அவரது கண்களிலும் நீர் கசிந்து கொண்டே இருந்தது. இந்த வீடியோ வைரலான நிலையில் விஷாலின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. விஷாலின் மக்கள் தொடர்பு நிர்வாகிகள் இந்த மருத்துவச் சீட்டை மட்டும் வெளியிட்டுள்ளனர்.

12 ஆண்டுகளுக்குப் பின் மதகஜராஜா

ஜெமினி ஃபிலிம் சர்க்கியூட் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2012-ல் உருவான திரைப்படம் ‘மதகஜராஜா’. 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது. 12 வருடங்களாக கிடப்பில் இருந்த மதகஜராஜா ஒரு வழியாக வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு தான் விஷாலின் உடல்நிலை குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:8 பேக் வைத்த விஷால், படப்பிடிப்பில் நடந்த பயங்கர விபத்து... ’மதகஜராஜா’ குறித்து பேசிய சுந்தர்.சி!

ஆஜானுபாகுவான விஷால்

45 வயதான விஷால் செல்லமே திரைப்படம் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி என கோபக்கார இளைஞர் கதாப்பாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்திய விஷால் ஆக்ஷன் அவதாரங்களில் ரசிகர்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். பின்னர் சத்யம் திரைப்படத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த விஷால் இதற்காக உடலை வருத்தி சிக்ஸ் பேக் தோற்றத்தை கொண்டு வந்திருந்தார். பின்னர் அவ்வப்போது தோல்விப்படங்களைக் கொடுத்தாலும் பாலாவின் அவன் இவன், துப்பறிவாளன் என கவனிக்கத் தக்க திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.

Last Updated : 8 hours ago

ABOUT THE AUTHOR

...view details