தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சூப்பர்ஸ்டார் ரசிகராக 'வேட்டையன்' படம் பார்த்த தளபதி விஜய்! - VIJAY WATCHED VETTAIYAN

Vijay watched Vettaiyan: இன்று ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் விஜய் சென்னையின் முதல் காட்சியை பார்த்துள்ளார்.

ரஜினிகாந்த், விஜய் புகைப்படம்
ரஜினிகாந்த், விஜய் புகைப்படம் (Credits - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 5:24 PM IST

சென்னை: ’வேட்டையன்’ திரைப்படத்தை நடிகர் விஜய் இன்று சென்னையில் உள்ள திரையரங்கில் பார்த்துள்ளார். டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் காலை முதல் திரையரங்குகளில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

வேட்டையன் படத்திற்கு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு குறைவாக இருந்த நிலையில், ’மனசிலாயோ’ பாடல் வெளியானது முதல் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளுக்கு மேல் வேட்டையன் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வேட்டையன் முதல் பாதியின் திரைக்கதை வேகமாக நகர்வதாகவும், இரண்டாம் பாதி எதிர்பார்த்த அளவு இல்லை எனவும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இன்று வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சியை சென்னை ரோகிணி திரையரங்கில், ரசிகர்களுடன் இணைந்து நடிகர் தனுஷ், அனிருத், ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், அவரது மகள்கள் ஐஷ்வர்யா, சவுந்தர்யா உள்ளிட்டோர் கண்டு மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: "உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியையும் போற்றுவேன்"... ரத்தன் டாடா மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்!

அதேபோல் பிரபல நடிகர் விஜய் சென்னை தேவி திரையரங்கில் இன்று காலை வேட்டையன் திரைப்படம் பார்த்துள்ளார். தான் ரஜினியின் தீவிர ரசிகர் எனவும், அவரது அண்ணாமலை படத்தின் வசனத்தை பேசி தான் சினிமாவிற்கு வந்ததாகவும் விஜய் பல மேடைகளில் கூறியுள்ள நிலையில், இன்று வேட்டையன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை விஜய் கண்டு ரசித்துள்ளார். இது ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details