தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'கோட்' படத்தின் 2வது சிங்கிள் 'சின்ன சின்ன கண்கள்' பாடல் வெளியீடு! - the goat 2nd single released - THE GOAT 2ND SINGLE RELEASED

The GOAT Movie Update : இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தி கோட்' படத்தின் 2வது பாடலான சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

கோட் படத்தின் 2வது சிங்கிள்
கோட் படத்தின் 2வது சிங்கிள் (Credits - actor vijay x page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 6:32 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளான இன்று படக்குழு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, கோட் படத்தின் 2வது பாடலான ’சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடலை நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணியின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி பாடச் செய்துள்ளனர். பாடல் வரிகளைப் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

2வது சிங்கிள் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கோட் படத்தின் 2வது பாடல் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த பாடல் பெங்களூருவில் வைத்து உருவாக்கப்பட்டது. இந்த பாடலை எனது தங்கை மருத்துவமனையிலிருந்து வந்தவுடன் பதிவு செய்யலாம் என நினைத்தேன். ஆனால் முடியவில்லை.

பதிவு செய்வதற்குள் என் தங்கை இறந்து விட்டாள் என செய்தி வந்தது. பவதாரிணி குரலைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதன்படி இந்த பாடல் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த என்னோட டீம் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம்" என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், "9 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய் சாருக்கு இந்தப் பாடல் மெலோடி ட்ரீட்டாக அமையும்" என பதிவிட்டுள்ளார். முன்னதாக, கோட் படத்திலிருந்து விசில் போடு பாடல் கடந்த ஏப் 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாடகி பவதாரிணி கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நாளைய தீர்ப்பு முதல் நாளைய முதல்வர் வரை.. நடிகர் விஜயின் 50வது பிறந்தநாள் ஸ்பெஷல்! - Vijay 50th birthday

ABOUT THE AUTHOR

...view details