தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இளைய தளபதியாக கலக்கிய கோட் வில்லன் விஜய்..தமிழ் சினிமாவில் வில்லன்களாக கொண்டாடப்பட்ட ஹீரோக்கள் ஒரு பார்வை! - Vijay praised for GOAT villain role - VIJAY PRAISED FOR GOAT VILLAIN ROLE

Vijay as Hero turned Villain: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கோட்' படத்தில் வில்லனாக கலக்கி உள்ள நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறார்.

கோட் படத்தில் வில்லனாக வரவேற்பை பெற்ற விஜய்
கோட் படத்தில் வில்லனாக வரவேற்பை பெற்ற விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 6, 2024, 3:41 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. நம்பியார் காலத்தில் தொடங்கி ரகுவரன், பிரகாஷ் ராஜ், என சமீப காலங்களில் வரவேற்பைப் பெறும் விநாயகன், ஃபகத் ஃபாசில், எஸ்.ஜே.சூர்யா வரை ரசிகர்களை ஈர்க்க தவறியதில்லை. ஆனால் சமீப காலங்களில் பிரபல ஹீரோக்கள் தொடங்கி சிங்கம் புலி போன்ற நகைச்சுவை நடிகர்கள் முதற்கொண்டு வில்லன் கதாபாத்திரத்தில் வரவேற்பை பெறுகின்றனர்.

இந்த மாற்றத்தை துவக்கி வைத்தவர் ரஜினிகாந்த் என்று கூறலாம். தனது சினிமா கரியரில் ஆரம்ப காலத்தில் ஆடு புலி ஆட்டம், 16 வயதினிலே என பல படங்களில் தனது வில்லனிஸம் மூலமும் கலக்கலான நடிப்பின் மூலமும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆக்ரோஷமான வில்லனாக இல்லாமல் தனது நக்கல், நையாண்டி மூலம் ஆடியன்ஸை கவர்ந்தார் ரஜினிகாந்த். தான் ஹீரோவாக நடிக்கும் படத்தின் கதாபாத்திரங்களிலும் வில்லனிசம் இருக்கும். ரஜினி கடைசியாக ரோபோ (Robo) படத்தில் முழு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.

வில்லன் குறித்து தலைப்பிலும் கமல்ஹாசனை தவிர்த்து பேச முடியாது. ஆரம்பத்தில் சிகப்பு ரோஜாக்கள் முதல் ஆளவந்தான், தசாவதாரம், சமீபத்தில் வெளியான கல்கி 2898AD வரை வில்லனாக கதாபாத்திரத்திற்கு ஏற்ப தத்ரூபமான நடிப்பை வழங்கி பாராட்டை பெற்றவர் கமல்ஹாசன். அதுவும் ஆளவந்தான் நந்து, தசாவதாரம் ஃபிளட்சர் ஆகிய கதாபாத்திரங்கள் பார்வையாளர்க்ளுக்கு பயத்தை தூண்டும் விதமாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்தில் ’வாலி’ படத்தில் வில்லனாக நடித்து பெயர் பெற்றவர் அஜித். தனது கரியரில் ஆரம்பத்தில் வில்லன் வேடத்தில் தைரியமாக நடித்து பாராட்டை பெற்றார். மங்காத்தா படத்தில் விநாயக் மகாதேவன் கேரக்டரில் கொஞ்சம் கூட இறக்கம் இல்லாத கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை அளித்திருப்பார் அஜித். பெரிய நடிகர்கள் தங்களது மைல்கல் படங்களில் நல்லவராக தான் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அஜித் உடைத்தெறிந்தார் என கூறலாம். அதேபோல் அந்நியன் படத்தில் விக்ரம், மாஸ்டர், விக்ரம் படங்களில் விஜய் சேதுபதி ஆகியோர் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர்.

இந்த வரிசையில் தற்போது விஜய் இணைந்துள்ளார் என கூறலாம். விஜய் முதலில் வில்லனாக நடித்த அழகிய தமிழ்மகன் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், கோட் படத்தில் ஜீவா கதாபாத்திரம் பாராட்டை பெற்றுள்ளது. 20 வயது துள்ளலான இளைஞராகவும், சமகாலத்து நக்கல் கொண்ட வில்லனாகவும் விஜய் கவனம் பெற்றதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

கோட் படத்தில் சீரியஸான காட்சிகளில் கூட வில்லனாக விஜய் செய்யும் மேனரிசம்களால் திரையரங்கில் விசில் பறந்தது. கோட் படத்தில் நல்லவராக நடித்த காந்தி கதாபாத்திரத்தை விட வில்லனாக நடித்த ஜீவா கதாபாத்திரம் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் வில்லன் விஜய் பேசும் வசனங்களை genZ எனப்படும் 2K kids தங்களது எளிதாக தொடர்புப்படுத்தி கொள்கின்றனர். தமிழ் சினிமாவில் பிடித்த வில்லன்கள் கதாபாத்திரங்களில் கோட் ஜீவாவும் இணைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'லியோ' பட சாதனையை முறியடித்ததா 'கோட்'?.. முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? - GOAT box office collections

ABOUT THE AUTHOR

...view details