டெல்லி: நடிகர் சூர்யா தனது சினிமா வாழ்வில் சோதனை காலத்தை கையாண்ட விதம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். கங்குவா திரைப்பட ப்ரமோஷனில் நடிகர் சூர்யா பேசுகையில், “ஒவ்வொரு முறையும் நீங்கள் அப்டேட்டாக இருக்க விரும்புவீர்கள். ஆனால் 5 வருடத்திற்கு ஒருமுறை அந்த குறிப்பிட்ட தலைமுறையின் ரசனை மாறும். இந்த தலைமுறை கஜினி திரைப்படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. நான் இன்று கஜினி, காக்க காக்க திரைப்படம் குறித்து தற்போது பேசிக் கொண்டிருக்க முடியாது.ஆனால் தற்போது காலகட்டத்திற்கு ஏற்றவாறு நான் அப்டேட்டாக இருக்க வேண்டும்” என்றார்.
நடிகர் சூர்யா தனது சோதனையான காலகட்டம் குறித்து பேசுகையில், "எனக்கு சினிமாவில் சூரரைப் போற்று படத்திற்கு முன்பு மிகவும் சோதனையான காலகட்டம். அப்போது பல கேள்விகள் என் மனதில் ஓடும். மீண்டும் எப்படி சினிமாவை நேசிப்பது, எப்படி கேமராவிற்கு முன் சந்தோஷமாக நிற்பது என பல கேள்விகளுக்கு இடையே எனக்கு சுதா கொங்குரா மூலமாக ’சூரரை போற்று’ வாய்ப்பு வந்தது” என்றார்.
மேலும் பேசுகையில், “தற்போது ஆடியன்ஸை தியேட்டருக்கு அழைத்து வர அவர்கள் கவனம் பெறும் படி வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும். வெறும் ஹீரோ, வில்லன் கதைகளாக இல்லாமல் திரைக்கதையில் சிறிய மாற்றம் வேண்டும்” என்றார்.