தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'கொட்டுக்காளி' திரைப்படத்தின் சர்ப்ரைஸ்ஸை உடைத்த சூரி! - soori reveal kottukkaali character - SOORI REVEAL KOTTUKKAALI CHARACTER

Kottukkaali: கொட்டுக்காளி படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது குறித்து சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொட்டுக்காளி போஸ்டர், சூரி
கொட்டுக்காளி போஸ்டர், சூரி (Credits - SKProdOffl and Soori X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 8:38 PM IST

சென்னை: கூழாங்கல் திரைப்பட இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இதில், சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார்.

இப்படத்தில், புகைப்பட இயக்குநராக சக்திவேல், எடிட்டராக கனேஷ் சிவா, நிர்வாக தயாரிப்பாளராக பானு பிரியா உள்ளிட்ட பலரும் பணியாற்றி உள்ளனர். இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொட்டுக்காளி படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு க்ளிம்ஸ் மூலம் அறிவித்தது. அதன்படி இப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்,"என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். இதில் வரும் என்னுடைய பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன் தான்.

இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவுமுறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி. இந்த படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மனபோராட்டத்தை சரியாக பிரதிபலிக்கணும்னு ரொம்ப கவனமாக இருந்தேன். அதை சரியாகவும் பண்ணி இருக்கேன்னு நம்புகிறேன். நீங்கள் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்" என அந்தப் பதிவில் சூரி கூறி உள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:தாத்தா வராரே.. கதறவிட போறாரே.. இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - INDIAN 2 OTT Release date

ABOUT THE AUTHOR

...view details