தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’அமரன்’ கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்! - ACTOR SIVAKARTHIKEYAN

Actor sivakarthikeyan Wife birthday: நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்திக்கு அமரன் திரைப்பட கெட்டப்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடிகர் சிவகார்த்திகேயன்
தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடிகர் சிவகார்த்திகேயன் (Credits - Sivakarthikeyan Doss Instagram Account)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 14, 2024, 12:34 PM IST

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவிக்கு ’அமரன்’ கெட்டப்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த ’அமரன்’ திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது.

மறைந்த முன்னாள ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்த படமாக அமரன் அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய்க்கு பிறகு 200 கோடிக்கு மேல் வசூல் செய்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவதால் ஓடிடி ரிலீஸை தள்ளி வைக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் ஃபிலிம்ஸிற்கு கோரிக்கை வைத்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாக வாழ்ந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரமாண்டத்தின் உச்சம், சூர்யாவின் அசத்தல் நடிப்பு... 'கங்குவா' விமர்சனம் என்ன?

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்திக்கு அமரன் திரைப்பட ராணுவ வீரர் கெட்டப்பில் சர்ப்ரைஸாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோ வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும், இரண்டு ஆண் குழந்தையும் உள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'SK23' படத்தில் நடித்து வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details