தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'அமரன்' வெற்றியை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்! - SIVAKARTHIKEYAN AMARAN SUCCESS

Sivakarthikeyan celebrated amaran success: அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

அமரன் திரைப்பட வெற்றியை கொண்டாடிய சிவகார்த்திகேயன்
அமரன் திரைப்பட வெற்றியை கொண்டாடிய சிவகார்த்திகேயன் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 6, 2024, 4:09 PM IST

Updated : Nov 6, 2024, 4:22 PM IST

சென்னை: ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி உருவான அமரன் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய்பல்லவி இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை அன்று வெளியானது.

அமரன் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 200 கோடியைக் கடந்து வசூலை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் அர்ப்பணிப்பும், சாய் பல்லவியின் மிகச் சிறந்த நடிப்பும் படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து, வெள்ளித்திரையில் அறிமுகமாகி, தற்போது அமரன் படத்தின்‌ மூலம் தனது அடுத்தகட்ட பாய்ச்சலை தொடங்கியுள்ளார். அமரன் படம் வெளியான திரையரங்குகளில் அவரது ரசிகர்கள் பல்வேறு விதமான கொண்டாட்டங்கள், நலத்திட்ட உதவிகள் செய்தனர்.

படத்தின் வெற்றிக்கு அவரின் ரசிகர்களின் பங்கும் அதிகம். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், தனது அமரன் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக அவர்களுடன் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடி உள்ளார்.

இதையும் படிங்க: கூலி படத்தை தொடர்ந்து கைதி 2, ரோலக்ஸ்... எல்சியூ யுனிவர்ஸ் முடிவு குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்!

சென்னையில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது ஆட்டோவின் பின்னால் சிவகார்த்திகேயன் பட வசனத்தை ஒட்டியுள்ளதை அவரிடம் காண்பித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன், "நீங்கள் படத்தின் வெளியீட்டை கொண்டாடுவதை விட நிறைய நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறீர்கள், அதனை தொடர்ந்து செய்து வர வேண்டும். அவர்களை தாண்டிவிட்டோம். இவரை விட பெரிய ஆள் என்று எல்லாம் நினைக்க வேண்டாம்" என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 6, 2024, 4:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details