தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"ஒரு நாவலை படித்தது போன்ற அனுபவம்"... ரஜினிகாந்தைச் சந்தித்த மகாராஜா இயக்குநர் நெகிழ்ச்சி! - Rajini praised Nithilan Swaminathan

Rajinikanth praised maharaja director: விஜய் சேதுபதி நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான மகாராஜா கோலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

மகாராஜா இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனை பாராட்டிய ரஜினிகாந்த்
மகாராஜா இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனை பாராட்டிய ரஜினிகாந்த் (Credits - Vijay sethupathi X Account, @Dir_Nithilan X account)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 2, 2024, 5:34 PM IST

சென்னை: கடந்த ஜூன் மாதம் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜாவில் அபிராமி, முனிஷ்காந்த், நட்டி, சிங்கம் புலி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த மகாராஜா திரைப்படத்தை திரையுலகின் உச்ச நடிகர்கள் முதல் அனைவரும் பாராட்டி வருகின்றனர். மகாராஜா வித்தியாசமான திரைக்கதையின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. விஜய் சேதுபதி, சிங்கம்புலி, ஒளிப்பதிவாளர் நட்டி, அனுராக் காஷ்யப் ஆகியோரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

தனது முதல் படமான 'குரங்கு பொம்மை' மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நித்திலன் சுவாமிநாதன், மகாராஜா மூலம் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். மகாராஜா இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதி இப்படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்ததாக தெரிகிறது.

ஏற்கனவே மகாராஜா படத்தை பார்த்து நடிகர் விஜய், இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனை பாராட்டியுள்ளார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளார். பின்னர், இதுகுறித்து நித்திலன் சுவாமிநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றி, உங்களைச் சந்தித்தது ஒரு வாழ்க்கை நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை கொடுத்துள்ளது.

உங்களிடமிருந்து தமிழ் சினிமா பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். உங்களுடைய பணிவும், விருந்தோம்பலும் என்னை வியக்க வைத்தது. மகாராஜா உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என நினைக்கும் எனக்கு நிறைவாக உள்ளது. தலைவர் நீடூழி வாழ்க" என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறவுள்ள 'ராயன்' திரைக்கதை... குஷியில் ரசிகர்கள்! - Raayan in oscars library

ABOUT THE AUTHOR

...view details