சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் நானி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தசரா மற்றும் ஹாய் நானா ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது டி.வி.வி என்டர்டெயின்மெண்ட் பேனரில் உருவாகும் "சூர்யாவின் சனிக்கிழமை" படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் நானியின் பிறந்தநாள் கொண்டாட்டமாக நேற்று (பிப்.24) இப்படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில், நானி நடிப்பில் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் சுஜீத் இயக்கவுள்ளார்.
தற்போது பவன் கல்யாண் நடிக்கும் 'ஓஜி' (OG) படத்தை இயக்கி வரும் சுஜீத், தனது அடுத்த படத்தில் நானியுடன் இணையவுள்ளார். 'சூர்யாவின் சனிக்கிழமை' படப்பிடிப்பு முடிந்தவுடன், 'நானி 32' படத்தின் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நடிகர் நானி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் "இது முழுமையான சுஜீத் படம். பவருக்குப் பிறகு.. இந்த லவ்வரிடம் வருவார் Nani32" என்று பகிர்ந்துள்ளார்.
அதிரடியான ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள 'நானி 32' படத்தின் அறிவிப்பு ஒரு கான்செப்ட் வீடியோ மூலம் வெளியிடப்பட்டது. நானி 32வது திரைப்படம் 2025இல் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:காத்து வாங்கும் ரிலீசான புதிய படங்கள்.. ரீ ரிலீஸ் படங்கள் தான் காரணமா?