தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகை சோபிதா துலிபாலாவை கரம் பிடிக்கும் நாக சைதன்யா... வைரலாகும் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள்! - Naga Chaitanya Sobhita Dhulipala - NAGA CHAITANYA SOBHITA DHULIPALA

Naga Chaitanya Sobhita Dhulipala: பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும், நடிகை சோபிதா துலிபாலா இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அவரது தந்தை நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாக சைதன்யா, சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்
நாக சைதன்யா, சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் (Credits - Nagarjuna Akkineni X account)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 2:20 PM IST

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, ஏ மாயா சேசாவே, மனம், லவ் ஸ்டோரி, மஜிலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பிரபல நடிகர் நாக சைதன்யாவிற்கும், நடிகை சோபிதா துலிபாலா இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து அவரது தந்தை நாகார்ஜுனா அவரது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்க்ள் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "எங்கள் மகன் நாக சைதன்யாவிற்கும், சோபிதா துலிபாலாவிற்கும் இன்று காலை 9.42 மணியளவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். எங்கள் குடும்பத்திற்கு சோபிதா துலிபாலாவை வரவேற்கிறோம். 8.8.8 முடிவில்லா காதலின் தொடக்கம்" என பதிவிட்டுள்ளார்.

நடிகை சோபிதா துலிபாலா கடந்த 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். 2016ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர், பொன்னியின் செல்வன்-2 படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார்.

முன்னதாக நாக சைதன்யா, சமந்தா ஆகிய இருவரும் காதலித்து, கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கல்கி 2898 AD முதல் ராயன் வரை... ஆகஸ்ட் மாதத்தில் ஓடிடி புது வரவுகள் என்ன? - August OTT releases

ABOUT THE AUTHOR

...view details