சென்னை: மைம் கலை ஆசிரியரான மைம் கோபி, தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர். இந்த நிலையில், மைம் கோபி சில மாதங்களுக்கு முன்பு பிரபல தனியார் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அதன் மூலம் கிடைத்த பணத்தை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செலவிடப் போவதாக அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், சென்னையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை, விமானத்தில் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு நடிகர் மைம் கோபி திட்டமிட்டிருந்தார். இதையடுத்து, நேற்று சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள தேன் மொழி நினைவு அறக்கட்டளை உதவியுடன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுமார் 10க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளை சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல, சென்னை விமான நிலையத்திற்கு அனைவரையும் அழைத்து வந்தனர்.
பின்னர், வான் உலா என பயணத்திற்கு பெயரிட்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளை முதல் முறையாக விமானம் மூலம் பெங்களூரு அழைத்துச் சென்றனர். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மைம் கோபி, “இதற்கு பெரிய பணச் செலவுகள் எதுவும் ஆகவில்லை. பெரிய மனசு இருந்தால் போதும், அனைவரும் மற்றவர்களுக்கு செய்வதை உதவியாக கருதாமல், கடமையாக கருத வேண்டும். நான் விமானத்தில் முதன்முறையாக செல்லவே 30 ஆண்டுகள் காத்திருந்தேன்.