சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'கோட்' (the greatest of all time). இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் கோட் திரைப்படம் 151.1 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சாக்னில்க் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், உலக அளவில் ரூ.285 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், கோட் திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பல பெரிய படங்களின் சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கோட் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் கதைப்படி வில்லனாக நடித்த மகன் கதாபாத்திரம் பாராட்டை பெற்று வருகிறது. துடிப்பான இளைஞராக விஜய்யின் நடிப்பு வேறு பரிணாமத்தில் இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.