சென்னை: நடிகர் சிம்புவின் நண்பரான மகத், தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பிரபலமடைந்தார். மேலும் சென்னை 28 2ஆம் பாகத்தில் நடித்து பிரபலமடைந்தார்.
இவரது நடிப்பில் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா' படம் வெளியாக உள்ளது. இதனைதொடர்ந்து ஸ்ரீவாரி ஃபில்ம் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் 'காதலே காதலே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மஹத், மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரேம்நாத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் இது குறித்து மகிழ்வுடன் பகிர்ந்திருப்பதாவது, "ஒரு தயாரிப்பாளரின் வெற்றி என்பது சரியான குழு மற்றும் திட்டமிடல் மூலம் முழுமையடைகிறது என்று நம்புகிறேன். ‘காதலே காதலே’ படத்தின் மொத்தக் குழுவினரும், ப்ரீ புரொடக்ஷன் கட்டத்தில் திட்டமிட்டபடி, ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளராக என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.