தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"மாளிகையில் பிச்சைக்காரன்" - வெளியானது கவினின் ப்ளடி பெக்கர் ட்ரெய்லர்! - BLOODY BEGGAR TRAILER

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிக்கும் 'ப்ளடி பெக்கர்' படத்த்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

ப்ளடி பெக்கர் ட்ரெய்லர் போஸ்டர்
ப்ளடி பெக்கர் ட்ரெய்லர் போஸ்டர் (Credits- Nelson Dilipkumar X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 8:52 PM IST

சென்னை:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் கவின். இவர் தற்போது இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் 'ப்ளடி பெக்கர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று (அக்.31) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு இன்று (அக் 10) வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கவின் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் டீசர் இந்த மாதம் அக்.7 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று அந்த படத்தின் இந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் பிச்சைக்காரனாக நடைக்கும் கவின் ஒரு அரண்மனைக்குள் சென்றுவிடுகிறார். அங்கு அவரை வேறு ஒரு நபராக மாற்றி விடுகின்றனர்.

இதையும் படிங்க:'முத்து' பட வசனத்தை பேசி அசத்தும் ஃபகத் ஃபாசில்... 'வேட்டையன்' திரைப்பட நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!

இதனை தொடர்ந்து அங்கு நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதையாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் கவினுக்கு இப்படமும் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடைசியாக கவின் நடிப்பில் வெளியான ’ஸ்டார்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகை நயன்தாராவுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படமானது வரும் தீபாவளி வெளியாகி சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்', ஜெயம் ரவி நடிப்பில் 'பிரதர்ஸ்' ஆகிய படங்களுடன் மோதவுள்ளதால் இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு பெரும் வரபிரசாதமாக அமையும் எனலாம்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details