தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சென்னையில் தக் லைஃப் ஷூட்டிங் ஓவர்.. ஓய்வுக்காக அமெரிக்கா புறப்பட்ட நடிகர் கமல்ஹாசன்! - thug life shooting update

சென்னையில் 'தக் லைஃப்' படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஓய்வு எடுக்க நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற கமல்ஹாசன்
திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற கமல்ஹாசன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 1:28 PM IST

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது மிகவும் பிஸியாக பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது.

விக்ரம் திரைப்படம் கொடுத்த உற்சாகத்தில் தான் தற்போது தொடர்ந்து தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சிலம்பரசன் நடிக்கும் படம் என பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார்.

மேலும் 37 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் (thug life) படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் உடன் இணைந்து தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி,அபிராமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கேங்ஸ்டர் கதையான தக் லைஃப் ரசிகர்கள் மத்தியில் இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நேற்று அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியன் 2, கல்கி, தக் லைஃப், பிக்பாஸ் என தொடர் படப்பிடிப்பில் இருந்த அவர் தற்போது சில காலம் ஓய்வெடுக்க அமெரிக்கா சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

ஒருவாரம் ஓய்வுக்கு பிறகு மீண்டும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல உள்ளார். ஆனால் இந்தியன் 2 படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதால் அதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் - நடிகர் இளவரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details