தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"பால்வெளி பாதை மேலே மேகமாய் உலவலாமே.." 'இந்தியன் 2' காலண்டர் பாடல் வெளியானது! - indian 2 calendar song released - INDIAN 2 CALENDAR SONG RELEASED

Indian 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காலண்டர்' என்கின்ற பாடல் இன்று வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 பாடல் போஸ்டர்
இந்தியன் 2 பாடல் போஸ்டர் (Credits - Lyca Production X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 6:14 PM IST

சென்னை :இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய திரைப்படம் 'இந்தியன் 2'. இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது.

கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில் தயாராகியுள்ள இப்படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் படத்திலிருந்து ’பால்வெளி பாதை மேலே மேகமாய் உலவலாமே..’ என தொடங்கும் காலண்டர் என்கின்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடலில் அனிருத்தின் இசை மிகவும் வித்தியாசமான உணர்வை கொடுக்கிறது என ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர்.

இப்பாடலை கபிலன் வைரமுத்து எழுதி உள்ளார். பாப் சிங்கர் சுவி, ஸ்ரவண பார்கவி, ஐஸ்வர்யா சுரேஷ் ஆகியோர் பாடலை பாடி உள்ளனர். குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற டெமி-லீ டெபோ நடனமாடி உள்ளார். முன்னதாக, படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜூன் 25 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடரானார் நடிகை ஸ்ரீலீலா! - Chennais Amrita brand ambassador

ABOUT THE AUTHOR

...view details