தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிறந்த நாளன்று ஜெயம்ரவி விவாகரத்து மனு! விசாரணை எப்போது தெரியுமா? - jayam ravi applies divorce - JAYAM RAVI APPLIES DIVORCE

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அக்டோபர் 10 தேதி விசாரணைக்கு வருகிறது.

ஜெயம் ரவி, ஆர்த்தி
ஜெயம் ரவி, ஆர்த்தி (Photo Credits - ETV Bharat Tamil Nadu, jayam ravi "x" page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 5:10 PM IST

சென்னை:ஜெயம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ரவி. இவர் பிரபல சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநர். ஜெயம் ரவி பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னனி தமிழ் நடிகராகவும் உள்ளார்.

இவர், சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தற்போது, பிரதர், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்புக்கு இடையே குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்வார். இதன் புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம்.

இதையும் படிங்க:நாளை பிறந்தநாள்.. இன்று விவாகரத்து.. ஜெயம்ரவி கொடுத்த ஷாக்!

15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்த நிலையில் தனது மனைவி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நேற்று (செப். 9) ஜெயம் ரவி அறிவித்தார்.

இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும். 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு அக்டோபர் மாதம் 10 தேதி சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details