தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நாளை பிறந்தநாள்.. இன்று விவாகரத்து.. ஜெயம்ரவி கொடுத்த ஷாக்! - Jayam ravi divorce - JAYAM RAVI DIVORCE

Jayam ravi divorce: பிரபல தமிழ் சினிமா நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தார் ஜெயம் ரவி
மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தார் ஜெயம் ரவி (Credits - ETV Bharat Tamil Nadu, Jayam ravi X account)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 9, 2024, 12:37 PM IST

Updated : Sep 9, 2024, 12:57 PM IST

சென்னை: பிரபல தமிழ் சினிமா நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களை கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது.

என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையில்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்கு பிறகு, ஆர்த்தி உடனான என திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும்.

இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்களின் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன்.

நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

நாளை பிறந்த நாள் கொண்டாட உள்ள ஜெயம் ரவி, மனைவியுடனான விவகாரத்து குறித்து அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நடிகர் சங்க தேர்தலை சந்திக்க பயமா? - கருணாஸ் பதிலடி! - south indian artistes meet

Last Updated : Sep 9, 2024, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details