சென்னை : ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்". மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளை பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது.
ஹிப்ஹாப் தமிழா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இப்படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி (pre release event) சென்னையில் திருவேற்காடு அடுத்த நூம்பலில் உள்ள பிஜிஎஸ் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் மற்றும் நடிகர் சுந்தர்.சி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும், படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய சுந்தர்.சி, "என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார். அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளை பார்க்கும்போதும் கண்ணீர் வருகிறது. வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம் வரை வளர்ந்திருப்பது மகிழ்ச்சி.
ஹிப்ஹாப் தமிழாவை மட்டும் தான் நான் அறிமுகப்படுத்தினேன். ஆனால், அவர் பல பேரை அறிமுகப்படுத்தி உள்ளார். அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்கு தருமளவு, என் மீது அவர் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி. இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.
பின்னர் நடிகர் நட்டி (எ) நட்ராஜ் பேசுகையில், "இப்படத்தில் என் பெயரிலேயே நடித்திருக்கிறேன். நானும் சுந்தர்.சி குடும்பத்திலிருந்து வந்தவன் தான். ஹிப்ஹாப் தமிழாவைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தின் கதையை கேட்டு பிரமித்துவிட்டேன். இந்த வயதில், இப்படி ஒரு கதை எழுதி, எடுப்பது சாதாரணமல்ல. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.
நடிகை அனகா பேசுகையில், "எனக்கு ஹிப்ஹாப் தமிழாவுடன் இரண்டாவது படம். கதையே மிக வித்தியாசமாக இருந்தது. நடிக்க கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் ஆதி தைரியம் தந்தார். மிக அழுத்தமான படம். மிகப்பெரிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். ஆதி மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். நான் இதுவரை செய்யாத மிக வித்தியாசமான கதாபாத்திரம். படக்குழுவினரின் ஒத்துழைப்பில் ரொம்ப ஈஸியாக நடித்தேன். எல்லோருக்கும் நன்றி. இந்த படம் மிக மிக வித்தியாசமான படமாக இருக்கும்"என தெரிவித்தார்.
இதையும் படிங்க :'இந்த வாட்டி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு' - பிக் பாஸ் சீசன் 8 ப்ரோமோ வெளியானது! - BIGG BOSS PROMO OUT NOW
ஹிப்ஹாப் தமிழா பேசுகையில், "என்னை அறிமுகம் செய்த சுந்தர்.சி அண்ணா இங்கு வந்து எங்களை வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி. இப்படத்தில் நடிகர் நட்ராஜனுக்கு மிக முக்கியமான ரோல். அவர் சூப்பராக நடித்திருக்கிறார். மேலும், சிங்கம் புலி அண்ணாவும் சிறப்பாக நடித்துள்ளார். மேலும், சாரா, அனகா, அழகம்பெருமாள் என நிறைய பேர் நடித்துள்ளனர். விஜயன் எனும் ஒரு துணை நடிகரை வில்லனாக நடிக்க வைத்துள்ளோம். அவர் பிற்காலத்தில் கண்டிப்பாக பெரிய நடிகராக வருவார்.
இப்படம் மற்ற படங்களிலிருந்து புதிதாக இருக்கும். இப்படி ஒரு படத்தை எடுக்க மிக முக்கிய காரணம் தொழில்நுட்ப கலைஞர்கள் தான். அனைவருக்கும் என் நன்றிகள். அர்ஜூன் மிக அட்டகாசமான விஷுவலை தந்துள்ளார். ஏகப்பட்ட செட் ஒர்க், வார் சீக்வன்ஸ் செய்துள்ளோம். நாகு சார் அட்டகாசமாக வேலை பார்த்துள்ளார். எடிட்டர் பிரதீப் அற்புதமாக எடிட் செய்துள்ளார்.
எங்கள் டீம் தான் மொத்த வேலையும் செய்துள்ளோம். ஜீவா தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளார். இப்படத்தை தயாரித்த அனுபவமே புதிது. ஆவதும், அழிவதும் இல்லை..இல்லை..இல்லையே எனும் சித்தர் வாக்கு தான் இப்படத்தின் அடிப்படை. நாம் சண்டையிட்டுக் கொண்டால் உலகம் அழிந்து போய் விடும் என்பது தான் இப்படம். ரசிகர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும்" என தெரிவித்தார்.