தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விடாமுயற்சி டப்பிங் பணிகளை நிறைவு செய்த அஜித்..! - VIDAA MUYARCHI DUBBING OVER

இயக்குநர் மகிழ் திருமணி இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி டப்பிங் பணிகளை அஜித்குமார் நிறைவு செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விடாமுயற்சி டப்பிங் பணிகளை நிறைவு செய்த அஜித்
விடாமுயற்சி டப்பிங் பணிகளை நிறைவு செய்த அஜித் (Credits - Lyca Productions X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 11:05 PM IST

சென்னை :தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. விடாமுயற்சி படத்தை இயக்குநர் மகிழ் திருமணியும், குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கி வருகின்றனர். கடந்த இரண்டரை வருடங்களாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விடாமுயற்சி படமும் இரு வருடங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமலே இருந்தது. அந்த வகையில் சமீபத்தில் 11.08 மணியளவில் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க :ஓவர்நைட்டில் சம்பவம் செய்த அஜித்...3 மில்லியனை தாண்டி சாதனை படைக்கும் 'விடாமுயற்சி' டீசர்!

இசையமைப்பாளர் அனிருத் இசையில், அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் வெளியான டீசர் யூடியூப்பில் 5.6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்துக்கான தனது டப்பிங் பணிகளை அஜித் நிறைவு செய்துவிட்டதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அஜர்பைஜானின் உள்ள டப்பிங் ஸ்டூடியோவில் அஜித் டப்பிங் செய்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details