சென்னை:தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித் குமாருக்கு மூளைப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடையே, அதிர்ச்சியையும் சோகததையும் ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமாரின் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், சில காரணங்களால் அஜித்தின் ஓய்விற்குப் பிறகு இப்படப்பிடிப்பு காட்சிகள் வரும் 15ஆம் தேதி மீண்டும் தொடங்கும் எனக் கூறப்பட்டது.
இதற்கிடையே, அஜித் குமாருக்கு மூளைப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, "மூளையில் கட்டியும் இல்லை அறுவைச் சிகிச்சையும் இல்லை. விடாமுயற்சி படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் மற்றும் அஜித்தின் நெருங்கிய நண்பரான வெற்றி துரைசாமி மரணத்துக்கு பின்னர் கொஞ்சம் மனதால் சோர்ந்து போனவர் நார்மல் செக்-அப்புக்குதான் அப்போலோ போனார்.