தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அபிஷேக்- ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து வதந்தி - நிரை விவாகரத்து என்றால் என்ன?

அபிஷேக்- ஐஸ்வர்யா தம்பதி நிரை விவாகரத்து செய்ய போகிவதாக வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. நட்சத்திர ஜோடிகளின் அடுத்தடுத்த விவாகரத்து அறிவிப்புகள்வெளியாகும் நிலையில் நிரை விவாகரத்து என்றால் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி
அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி (Credits- Aishwarya Rai Bachchan Insta Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ஹைதராபாத்:பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள் அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் பச்சன் தம்பதி. சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் தங்களது 16 வருட திருமண வாழ்வை முடித்து கொள்ள இருப்பதாக வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த அம்பானி வீட்டு திருமணத்தில் இருவரும் தனி தனியே பங்கேற்றனர்.

பிரிந்து வாழ்கிறார்களா அபிஷேக்- ஐஸ்வர்யா தம்பதி?:இந்த திருமணத்தில் அபிஷேக் பச்சன் தனது தந்தை, தாய், சகோதரியுடன் கலந்து கொண்ட நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராதனவோடு கலந்து கொண்டார். இந்த சம்பவம் மீண்டும் அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் பச்சன் தம்பதியின் விவகரத்து தொடர்பான சர்ச்சை பேச்சுக்களுக்கு வழிவகுத்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல கோணத்தில் தகவல் பரவி வந்தாலும் அபிஷேக் - ஐஸ்வர்யா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் தர வில்லை.

நிரை விவாகரத்து என்றால் என்ன?நட்சத்திர ஜோடிகளின் திருமண முறிவு குறித்து அலசும் போது "நிரை விவாகரத்து (GREY DIVORCE) " எனப்படும் விவாகரத்துக்களை பற்றி அறிந்து கொள்ளுவது அவசிமாகிறது. இந்தியாவில் நட்சத்திர ஜோடிகளின் திருமண முறிவுகள் குறித்த அறிவிப்பு தொடர்கதையாக வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளது எனலாம். ஆனால் இந்த "நிரை விவாகரத்து" சொல் புதிதாக தோன்றலாம்.

விவாகரத்தும் உளவியலும்:இந்த வகை விவகரத்து மேற்கத்திய நாடுகளில் சாதரண போக்காக இருந்தது. தற்போது இந்தியாவின் நட்சத்திர குடும்பங்கள் மத்தியில் வேரூன்றத் தொடங்கியுள்ளது. இது குறித்து வேத மறுவாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் மூத்த உளவியலாளர் ஆஷி தோமர் கூறுகையில், “இந்த நிரை விவாகரத்து என்பது 50 வயதுக்கு மேற்பட்டோர் தங்களது திருமண பந்ததை முறித்து கொண்டு. தங்களது முதுமையில் நிரை முடிகள் வளர்ந்த காலத்தில் பல ஆண்டுகால திருமணத்தில் இருந்து விடுப்பட்டு விவாகரத்து பெருவதாகும்.

இதையும் படிங்க:சவுந்தர்யா VS சுனிதா... பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்கில் முற்றும் மோதல்!

விவாகரத்தில் பொருளாதார பின்னடைவு பெண்களுக்கா?இந்த போக்கு கடந்த காலங்களாக இருந்து வந்த திருமண வாழ்வு மீதான அழுத்தங்களை கலையும் துணிச்சல் செயலாக பார்க்கப்படுகிறது. என்னென்றால் இந்தியாவில் திருமண பந்ததில் இருக்கும் ஆண் பொருளாதார ரீதியாக பெரும்பாலும் நிலைத்து உள்ளனர். ஆனால் பெண் பொருளாதார ரீதியாக தனது கனவரை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த முடிவுக்கு முதல் முக்கியமான காரணம் பெண்கள் நிதி சார்பற்று நிலையில் இருக்க தயாராக உள்ளார்கள் என கணிக்க முடிகிறது.

மேலும் தற்போது வயதானவர்கள் மத்தியிலும் திருப்தியற்ற உறவுகளைத் தாங்கிக் கொள்ளவதற்கு, விவாகரத்து செய்து கொள்ளலாம் என நினைக்கும் எண்ணம் தோன்றியுள்ளது. மேலும் பெண்களின் பொருளாதார சுதந்திரம் திருப்தியற்ற திருமணங்களை விட்டு வெளியேற அதிகாரம் அளிக்கிறது ”என தெரிவித்தார்.

நிரை விவாகரத்து பெற்ற பிரபல ஜோடிகள்:இந்த நிரை விவாகரத்து என்பது குறிப்பாக உயர்மட்ட பிரபலங்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் அவர்கள் வாழ்வில் ஒரு சமூக பிம்பத்துடன் தனது தனிப்பட்ட வாழ்வை சேர்க்கும் போது பல அழுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது. இந்தியாவின் பிரபல நட்சித்திர ஜோடிகளின் நிரை விவாகரத்து குறித்து காணலாம்.

1. சைஃப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங்:நடிகர் சைஃப் அலிகான் 12 வயது மூத்தவரான அம்ரிதா சிங்கை திருமண செய்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்தார். இதையடுத்து நடிகர் சைஃப் அலிகான் கரீனா கபூரை மறுமணம் செய்து கொண்டார். நடிகை அம்ரிதா திருமண செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. கமல்ஹாசன் மற்றும் சரிகா: நடிகர் கமல்ஹாசன் நடிகை சரிகாவை திருமண செய்த நிலையில் 16 ஆண்டுகள் பின் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்குப் பிறகு சரிகா தன்னை தானே மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கட்டியெழுப்ப துணிச்சல் ஒரு எடுத்துகாட்டு எனலாம்.

3.ஓம் பூரி மற்றும் நந்திதா பூரி:நடிகர் ஓம் பூரி பத்திரிக்கையாளரான நந்திதா பூரியை திருமண செய்தார். இவர்களது 26 ஆண்டுகால திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்தது.

திருமண பந்ததை முறித்து கொள்ளுவது இந்தியாவில் அவ்வளவு எளிதான காரியமல்ல. சட்ட ரீதியாக பிரிவுகான அறிவிப்பு வெளியானலும் மனரீதியாக மீண்டு எழ காலம் தேவை. அன்பை பகிர்ந்து கொண்டவர்களின் நினைவுகளை விட்டு வெளியேறி மீண்டும் ஒரு புதிய வாழ்வை அமைப்பது மிக சவாலானதாக உள்ளது. இருப்பினும் திருமண ஒருவர் வாழ்வில் நிம்மதி, அன்பு, துணை, நம்பிக்கை அளிப்பதாக இருப்பதால் இந்தியாவில் உள்ள அனைவரும் தனது வாழ்வின் திருமண பந்ததில் ஈடுப்பட்டுள்ள இருமனமும் தனது திருமண வாழ்க்கை குறித்த முடிவை தானே நிர்ணயக்கும் இடத்திலும் அதற்கான உரிமையை எடுத்து கொள்ளும் இடத்திலும் இருப்பது சுதந்திரத்துவத்தின் தன்மையாக இருக்கிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details