சென்னை: ஒவ்வொரு வருடமும் திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு தேசிய விருது வழங்குகிறது. அந்த வகையில், இன்று 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022இல் தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கு இன்று தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் நான்கு விருதுகளும், திருச்சிற்றம்பலம் திரைப்படம் 2 விருதுகளையும் வென்றுள்ளது. தேசிய விருதுகள் பெற்ற கலைஞர்கள் பட்டியல் பின்வருமாறு;
தேசிய விருது பெறும் பிரிவு | தேசிய விருது பெறும் கலைஞர் | திரைப்படம் |
சிறந்த தமிழ் திரைப்படம் | மணிரத்னம் | பொன்னியின் செல்வன் பாகம் 1 |
சிறந்த பின்னணி இசை | ஏ.ஆர்.ரஹ்மான் | பொன்னியின் செல்வன் பாகம் 1 |
சிறந்த ஒளிப்பதிவு | ரவி வர்மன் | பொன்னியின் செல்வன் பாகம் 1 |
சிறந்த ஒலி வடிவமைப்பு | அனந்த் கிருஷ்ணமூர்த்தி | பொன்னியின் செல்வன் பாகம் 1 |
சிறந்த நடிகை | நித்யா மேனன் | திருச்சிற்றம்பலம் |
சிறந்த நடன வடிவமைப்பு | ஜானி, சதீஷ் | திருச்சிற்றம்பலம் |
சிறந்த நடிகர் | ரிஷப் ஷெட்டி | காந்தாரா |
சிறந்த கன்னட திரைப்படம் | பிரசாந்த் நீல் | கே.ஜி.எஃப் 2 |
சிறந்த மலையாள திரைப்படம் | தருண் மூர்த்தி | சவுதி வெள்ளக்கா CC.225/2009 |
சிறந்த இந்தி திரைப்படம் | ராகுல் வி.சித்தேல்லா | குல்முகர் |