தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

சென்னை ஐஐடியின் புதிய ஒப்பந்தம்.. 35 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு! - IIT MADRAS

சென்னை ஐஐடி - ரெனால்ட் நிசான் டெக்னாலஜி இடையே செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், 35 ஆயிரம் பிஎஸ் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பணிப்பயிற்சி, பணிநியமன வாய்ப்புள்ளது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2024, 8:59 AM IST

சென்னை:சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் திறமை மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக ரெனால்ட் நிசான் டெக்னாலஜி - பிசினஸ் சென்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரெனால்ட் நிசான் டெக்) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இதன்மூலம் பிஎஸ் பட்டப்படிப்பில் ஈடுபட்டுள்ள 35 ஆயிரம் மாணவர்களுக்கு பணிப்பயிற்சி, பணிநியமன வாய்ப்புகளை வழங்கும்.

திறமை மேம்பாடு, அறிவுப் பரிமாற்றத்தை வளர்ப்பதற்கு இது வலுமான கட்டமைப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரெனால்ட் நிசான் டெக் நிபுணர்கள் தலைமையிலான குழுவினர் வழிகாட்டுதல் திட்டங்கள், கலந்தாலோசனை அமர்வுகள், தலைமைப் பண்புக்கான உரையாடல்கள் மூலம் கல்வி அனுபவத்தை மேம்படுத்த உள்ளனர்.

சென்னை ஐஐடியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது. அதில், சென்னை ஐஐடி (கல்விப் படிப்புகள்) பிரதாப் ஹரிதாஸ், ரெனால்ட் நிசான் டெக்கின் நிர்வாக இயக்குநர் தேபாஷிஸ் நியோகி, சென்னை ஐஐடி கோட் (Centre for Outreach and Digital Education) தலைவரும், பிஎஸ் பட்டப்படிப்பு - என்பிடெல் ஒருங்கிணைப்பாளருமான ஆண்ட்ரூ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை ஐஐடி (ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பேசிய சென்னை ஐஐடி டீன் (கல்வி பாடப்பிரிவுகள்) பிரதாப் ஹரிதாஸ், "கல்வி மற்றும் கார்ப்பரேட் உலகங்களுக்கு இடையே பாலங்களை கட்டமைக்கும் ஐஐடியின் தொலைநோக்குப் பார்வைக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனக் கூறலாம். ரெனால்ட் நிசான் டெக் மற்றும் சென்னை ஐஐடி இணைந்து, எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதன் அடிப்படையில் ஒத்துழைப்புக்கான அளவுகோலை நிர்ணயிக்கின்றன. பெருநிறுவனங்கள் துறையுடன் இதுபோன்ற மேலும் பல ஈடுபாடுகளை எதிர்பார்க்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.

சென்னை ஐஐடியின் சென்டர் பார் அவுட்ரீச் அண்ட டிஜிட்டல் எஜுகேஷன் (Centre for Outreach and Digital Education- CODE) நடத்தும் இணைய வழிப் படிப்பான எம்டெக் (M.Tech) பட்டப்படிப்பு பாடத்திட்டம், நிர்வாகக் கல்வி சான்றிதழ் பாடத்திட்டங்கள், எம்பிடெல் படிப்புகள் மூலம் ரெனால்ட் நிசான் டெக் ஊழியர்கள் மேம்பட்ட ஆற்றலைப் பெற இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.

இதுகுறித்து சென்னை ஐஐடியின் கோட் தலைவர் மற்றும் ஐஐடிஎம் பிஎஸ் பட்டப்படிப்பு மற்றும் என்பிடெஎல் ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறும் போது, "இந்த ஒத்துழைப்பு கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள கூட்டுறவை பிரதிபலிக்கிறது. இதில், இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் பலத்தையும் பலன்களையும் பெறுகின்றனர்.

பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சிகள், வழிகாட்டுதல் திட்டங்கள், பயிற்சி வாய்ப்புகள் வாயிலாக ரெனால்ட் நிசான் டெக் அளித்துவரும் ஆதரவு எங்கள் மாணவர்களின் கற்றல் பயணத்தை மேம்படுத்துகிறது. ஐஐடி தனது அதிநவீன படிப்புகள் மூலம், அவர்களின் பணியாளர்களை மேம்படுத்தி, வளர்ந்து வரும் சவால்களைச் சமாளிக்க அவர்களைத் தயார்படுத்துகிறது" என்றார்.

ரெனால்ட் நிசான் டெக் - சென்னை ஐஐடி இடையேயான ஆழ்ந்த தொடர்பை வலுப்படுத்தும் அம்சங்கள்:

  • ரெனால்ட் நிசான் டெக் நிறுவனத்தின் மூத்த தொழில் வல்லுநர்கள் மூலம் ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் மாணவர்களுடன் இணைந்து செயல்படுதல்,
  • 140+ மணி நேரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு கலந்துரையாடல் - தேர்வாளர்களாக (டிப்ளமோ
    அளவில்)
  • ‘மெஷின் லேர்னிங் பிராக்டீஸ் ப்ராஜெக்ட்’ மற்றும் ‘விளக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு’ பற்றி தலைமைப் பண்புக்கான கலந்துரையாடல்
  • ரெனால்ட் நிசான் டெக் நிறுவனத்தில் முழுநேர பணியிடங்களுக்கு மாற்றப்பட்ட மூன்று மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி வாய்ப்பு வழங்கப்பட்டது
  • ரெனால்ட் நிசான் டெக் நடத்தும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய வாழ்க்கை (Living with AI) குழு விவாதத்தில் சென்னை ஐஐடி ஆசிரியர்கள் பங்கேற்பு
  • 300-க்கும் மேற்பட்ட ரெனால்ட் நிசான் டெக் தொழில் வல்லுநர்கள், மின்சார வாகனங்கள், 3D அச்சிடுதல், விநியோகச் சங்கிலி, இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, மனிதவளப் பகுப்பாய்வு (eMobility, 3D Printing, Supply Chain, Machine Learning, AI, HR Analytics) உள்ளிட்ட பல்வேறு மற்றும் ஐஐடிஎம் ‘கோட்’ (CODE) பாடத் திட்டங்களை எடுத்துள்ளனர்
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள 300 மாணவர்களுக்குத் தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இதையும் படிங்க:ஒடிசா சாலை பாதுகாப்பு: சென்னை ஐஐடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ABOUT THE AUTHOR

...view details