சென்னை:இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, இன்றும் கிராமுக்கு ரூ.10 அதிகரித்த நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூ.8055-க்கும், ஒரு சவரன் ரூ. 64,440-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் என்றாலே மக்கள் மத்தியில் சேமிப்பு என்ற ஒரு எண்ணம் உள்ளது. அதனால், எதிர்கால தேவைக்காக இன்றே தங்கத்தை வாங்கி சேமிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. பொதுவாகவே ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்கும் போது, அதன் விலையும் உயருவது வழக்கம். அந்த வகையில், தங்க நகையின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, அதன் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக, தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதார சூழலின் மத்தியில் உள்ள கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், 2025 வருடத் தொடக்கத்தில் இருந்தே நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதாவது, கடந்த (2024) டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி ரூ.56,880க்கு விற்பனையான தங்கம் விலை, இன்று ரூ.64,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்டம் ரூ.10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதனால், தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கணியாக மாறி வருகிறது.