சென்னை: தங்கம் சேமிப்புகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று, தமிழ்நாட்டுப் பெண்கள் தங்க நகைகள் மீது கொண்டுள்ள விருப்பம் காரணமாக, தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.
திடீரென தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? - Today Gold and Silver Rate - TODAY GOLD AND SILVER RATE
கடந்த சில நாட்களாக குறைந்த அளவிலான ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்கம் விலை, தற்போது அதிரடியாக உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Sep 25, 2024, 12:24 PM IST
அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.25) கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,060-க்கும், ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (செப்.25):
- 1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.7,060
- 1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.56,480
- 1 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ.7,702
- 1 சவரன் தங்கம் (24 கேரட்) - ரூ.61,616
- 1 கிராம் வெள்ளி - ரூ.101
- 1 கிலோ வெள்ளி - ரூ.1,01,000