சென்னை: மத்திய பட்ஜெட்டில் இறங்குமதி வரி குறைப்புக்கு பிறகு சரிவை சந்தித்த தங்கம் விலை அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஏறுமுகத்தை கண்டது. உலக அளவில் அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு, இஸ்ரேல் - லெபனான் போர் பதற்றம் உள்ளிட்ட அசாதாரண சூழல் காரணங்களால் தங்கம் விலை பெரும் மாற்றத்தை கண்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ.57 ஆயிரத்து 120க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7 ஆயிரத்து 140க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ரூ. 57 ஆயிரத்து 280 க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ, 7 ஆயிரத்து 160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.