சென்னை:இந்திய மக்களின் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது தங்கம். அந்த வகையில், இந்தியர்களிடம் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுவாக தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கத்தின் இறக்குமதி வரி குறைப்புக்குப் பிறகு மளமளவெனச் சரிவை சந்தித்த தங்கம் விலை, அடுத்த சில வாரங்களிலேயே மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக உயர்ந்த தங்கம் ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ.3 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து சாமானிய மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், நகையின் விலை என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறத்துவங்கியது.
இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத நிலையில் நேற்று (அக்.9) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, சவரனுக்கு ரூ.560 அதிரடியாக சரிந்தது. அதனால் நகை முதலீட்டாளர்களும், இல்லத்தரசிகளும் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை 2வது நாளாகக் குறைந்துள்ளது.