சென்னை: தங்கம் என்பது ஆடம்பர ஆபரணமாக மட்டுமில்லாமல், இந்திய மக்களின் சேமிப்பின் முக்கிய பொருளாகவும் விளங்குகிறது. ஆனால் தங்கம், கடந்த சில நாட்களாகவே அதிகப்படியான உயர்வை கண்டு வந்ததால், மக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
பொதுவாக தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, உலக நாடுகளிடையே உருவாகி வரும் போரின் எதிரொலி மற்றும் பொருளாதார மந்தம் காரணாமாகவும் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை சற்று ஏற்றம் கண்டு வந்தது. தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் கண்டு வந்த தங்கம் விலை, சனிக்கிழமை வார இறுதி நாளான அன்று அதிரடியாக சரிந்தது.
அதாவது சவரனுக்கு ரூ.1,520 குறைந்து பெரும் அதிர்ச்சியை அளித்தது. அதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையானது. தற்போது, வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதாவது, கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 630க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.