தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சற்று குறைந்த தங்கத்தின் விலை... வாடிக்கையாளர்கள் ஆறுதல்! - GOLD RATE TODAY IN TAMILNADU - GOLD RATE TODAY IN TAMILNADU

Today Gold and Silver rate: தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தில் விலை இன்று (17.05.2024) சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம் தொடர்பான கோப்புப்படம்
தங்கம் விலை நிலவரம் தொடர்பான கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 12:46 PM IST

சென்னை:தினந்தோறும் ஏற்றத்தைக் காணும் தங்கத்தின் விலை, அவ்வப்போது சிறிதளவில் விலைக் குறைந்தும் வருகிறது. தங்கம் என்பது ஆடம்பர ஆபரணமாக மட்டுமில்லாமல், இந்திய மக்களின் சேமிப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், தற்போதைய தங்கத்தின் விலை ஏற்றத்தால் சாமானிய மக்களுக்கு அது எட்டாக்கனியாக மாறி வருகிறது.

தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்துத்தான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக உயர்வை கண்டுவந்த தங்கத்தின் விலையால் மக்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதன் விலை சற்று குறைந்துள்ளது. நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை என்பதால் இரண்டு நாளைக்கு தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்காது.

சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில், இன்றைய தங்கம் விலையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. முன்னதாக, நேற்று (வியாழக்கிழமை) நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.54 ஆயிரத்து 360க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.54 ஆயிரத்து 160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ.25 குறைந்து, ரூ.6 ஆயிரத்து 770க்கும், ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்து 160 விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியை பொருத்தவரை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.92.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.92 ஆயிரத்து 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:கோடை கால சிறப்பு ரயில்! ராஜபாளையம் வந்தடைந்த தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details