சென்னை: இந்தியாவில் உள்ள மக்களிடம் முதலீட்டில் முக்கியத்துவம் வகிப்பது தங்கம். முதலீடு மட்டுமல்லாமல் பல சமூக, கலாச்சார காரணங்களுக்காகவும் மக்கள் அதிகளவில் தங்கத்தை வாங்குகின்றனர். அப்படிப்பட்ட தங்கத்தின் விலை பல்வேறு பொருளாதார காரணங்களால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
அவ்வப்போது குறைந்து வரும் தங்கம் அதிகளவில் ஏற்றத்தை நோக்கி மட்டும் பயணித்து வருகிறது. மக்கள் மத்தியில் தங்கத்தின் தேவை அதிகரிக்க அதிகரிக்கத் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால், தங்க நகை முதலீட்டாளர்களும், இல்லத்தரசிகளும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தங்கம் விலை உயர்வு என்பது மக்களுக்கு மட்டுமல்லாமல், வியாபாரிகளுக்கும் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை நிச்சயம் சவரனுக்கு ரூ.8,000 முதல் 9,000 உயர்ந்து 60 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளது எனவும் சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.