சென்னை:சேமிப்பு என்றாலே முதலில் மக்கள் மனதில் நினைவுக்கு வருவது தங்க நகைகள். எதிர்காலத் தேவைக்காகவும், பரிசு வழங்குவது, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு என தங்கம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி பெண்களுக்கு மிகவும் பிடித்த ஆபரணம் என்றும் கூறலாம். இந்த நிலையில், இந்தியாவில் பண வீக்கம், பொருளாதார மந்தநிலை காரணமாகவும், சர்வதேச அளவிலான பல மாற்றங்கள் காரணமாகவும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது.
இதனால் சாமனிய மக்கள் மனதில் தங்கம் வாங்குவது என்றாலே, ஒருவித அச்சம் வந்துள்ளது. இப்படி நகையின் விலை அதிகரித்துக் கொண்டே போனால் என்னதான் செய்வது எனவும், ஏழை மக்களின் வாழ்க்கையில் தங்க நகை என்பது எட்டாக்கணியாக மாறிவிடுமோ? எனவும் புலம்பும் அளவுக்கு தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்கிறது. அந்த வகையில், நேற்று (செவ்வாய்கிழமை) ரூ.53 ஆயிரத்து 360 ஆக விற்பனையான தங்கம், இன்று ஒரு சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.53 ஆயிரத்து 640 ஆக விற்பனை செய்யப்படுகிறது.