அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ், மூன்று ஆண்டுகளுக்குப் பின் அமேசான் ஷேர்களை விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டில் அதிகபட்சமாக அமேசான் நிறுவனத்தின் 50 மில்லியன் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலகின் மூன்றாவது பணக்கார தொழிலதிபராக இருக்கும் பெசோஸின் சொத்து மதிப்பு 12 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது. மேலும், தனது நிறுவனத்தின் பங்குகளை 12 மாதங்களில் விற்றதன் மூலம், பல கோடிகளில் வருமானம் ஈடியுள்ளார்.