தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஜனவரியில் குறைந்த ஏற்றுமதி...36.43 பில்லியன் அமெ.டாலர்களாக வீழ்ச்சி! - EXPORTS CONTRACT DIPPED

ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரியில் குறைந்த ஏற்றுமதி
ஜனவரியில் குறைந்த ஏற்றுமதி (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2025, 5:26 PM IST

புதுடெல்லி:ஜனவரி மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.38 சதவீதம் குறைந்து 36.43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2024 ஜனவரியில் 53.88 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இறக்குமதி கடந்த மாதம் 10.28 சதவீதம் அதிகரித்து 59.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

திங்களன்று வெளியிடப்பட்ட மத்திய அரசின் தரவுகளின்படி, நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஜனவரியில் 2.38 சதவீதம் குறைந்து 36.43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 37.32 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

2024 ஜனவரியில் 53.88 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இறக்குமதி கடந்த மாதம் 10.28 சதவீதம் அதிகரித்து 59.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் வர்த்தக பற்றாக்குறை 22.99 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில், ஏற்றுமதி 1.39 சதவீதம் அதிகரித்து 358.91 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி 7.43 சதவீதம் அதிகரித்து 601.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details