சென்னை:நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024 தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதிக்கான வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்து அறிவித்தார். அறிவிப்பு வெளியான சில நமிடங்களிலேயே, பங்குச் சந்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.
இதன் தாக்கத்தால் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்துள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைத்து அறிவிக்கப்பட்ட உடனே தங்கம் விலையில் உடனடியாக இறக்கம் எதிரொலித்துள்ளது. அதன்படி, இன்று பிற்பகலில் சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கான வரியை குறைத்துள்ளது குறித்தும், தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது குறித்தும் சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசிடம் சுங்க வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைத்திருந்தோம். அந்த கோரிக்கைக்கு ஏற்றார் போல் பட்ஜெட்டில் மத்திய அரசு சுங்க வரியை குறைத்துள்ளது. சுங்க வரியை குறைத்துள்ளதால் பொதுமக்களுக்கு நல்லதாக அமைந்துள்ளது. ஒரே நாளில் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது, இது பொதுமக்களுக்கு நல்லதாக இருந்தாலும், வியாபாரிகளுக்கு இதில் சில இடற்பாடுகள் இருக்கத்தான் செய்யும்.