டெல்லி: மனிதர்களின் அன்றாட வாழ்க்கை சாலை போக்குவரத்தை நம்பியே உள்ளது. அந்த சாலையை அரசாங்கம் சரிவர பராமரிக்க வேண்டியது அவசியம். ஒரு சிறிய பள்ளம் கூட பெரிய விபத்தை ஏற்படுத்தி உயிர்ச்சேதம் வரை நடக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை சாலைகளில் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம். ஆனால், அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறிய ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலைத் துறை 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, சம்பந்தப்பட்ட பொறியாளரை பணிநீக்கம் செய்துள்ளது.
டெல்லி - வதோதரா விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருக்கும் கார்கள் திடீரென காற்றில் பறந்து பின்னர் மீண்டும் சாலையில் விழும் வீடியோ ஒன்று அண்மையில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டது.
அந்த வீடியோவில் பார்க்கும்போது, சாலையானது சமமாக இருப்பதைப் போலவே இருந்தாலும், குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும் கார்கள் வேகத்தடையில் மோதி வந்த வேகத்தில் பறப்பதைப் போல உள்ளது. இந்நிலையில், பார்ப்பதற்கு பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ குறித்து விசாரித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், அந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இதையும் படிங்க:என்ன கொடுமை சார் இது!.."ஒரு டீயின் விலை 340 ரூபாயா?" - ப.சிதம்பரம் ட்வீட்!