பெங்களூரு:கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் டிராலி இழுக்கும் தொழிலாளியாக இருந்து வந்தவர் ராமகிருஷ்ணப்பா (45). ராமகிருஷ்ணப்பாவுக்கு திருமணமாகி தேவனஹள்ளியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர் நேற்று மாலை 6:30 மணியளவில் வழக்கம்போல விமான நிலையத்தின் டெர்மினல்-1 பகுதியில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் ராமகிருஷ்ணப்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமகிருஷ்ணப்பாவின் கழுத்தில் பலமாக குத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமகிருஷ்ணப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடனே சிஐஎஸ்எஃப் காவலர்கள் கத்தியால் குத்திய நபரை பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.