ரமணகரா (கர்நாடகா):கர்நாடகா மாநிலம், ரமணகரா பகுதியில் சிவா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிவாவின் மனைவி ஸ்வீட்டிக்கு (24), கிரிகோரி பிரான்சிஸ் (27) என்பவருடன் திருமணத்துக்கு மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இந்த உறவு தொடரே, கடந்த மாதம் 15 ஆம் தேதி (செப்டம்பர் 15). தனது கணவனைவிட்டு பிரிந்து, அவருக்கு தெரியாமல் மஞ்சுநாத் நகரில் ஸ்வீட்டி குடியேறியுள்ளார். ரமணகாரா நகரில் இருந்து வெளியேறியபோது அவர் தமது இரு குழந்தைகளையும் கூடவே அழைத்துச் சென்றார்.
ஆனால், தமது குடும்பத்தை காணாமல் தவித்த சிவா, அதுதொடர்பாக டிஜே ஹள்ளி காவல் நிலையத்தில ஆட்கள் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். புகாரளித்த சில நாட்களுக்கு பிறகு தமது குழந்தைகளும், மனைவியும் ரமணகராவிலேயே இருப்பதை சிவா அறிந்தார்.
இதையடுத்து, அக்டோபர் 12 ஆம் தேதி, சிவா ரமணகரா சென்றபோது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதை அவர் அறிந்தார். 10- 12 நாட்களுக்கு முன் குழந்தைகள் கொல்லப்பட்டதை அக்கம் பக்கத்து வீட்டினர் மூலம் சிவா அறிந்து அதிர்ச்சியில் உறைந்தார். கொல்ஸப்பட்ட குழந்தைகள் ரமணகரா இடிகாட்டில் புதைக்கப்பட்டதும் சிவாவுக்கு தெரியவந்தது. இதில் ஒரு குழந்தைக்கு இரண்டும் வயதும், இன்னொரு குழந்தை பிறந்து 11 மாதமும் தான் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் ஒரு குழந்தை அக்டோபர் 1 ஆம் தேதியும், மற்றொரு குழந்தை அக்டோபர் 7 ஆம் தேதியும் கொல்லப்பட்டதாகவும் சிவா அறிந்தார். இரண்டாவது குழந்தை இடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்டபோது, சந்தேகமடைந்த காவலர், ஸ்வீட்டி மற்றும் பிரான்சிஸ்சை தமது செல்ஃபோனில் புகைப்படம் மற்று்ம் வீடியோ எடுத்துள்ளார்.
தங்களின் உறவுக்கு குழந்தைகள் இடைஞ்சலாக இருக்கும் என்று கருதியே ஸ்வீட்டியும், கிரிகோரி பிரான்சிஸும் தனது இரு குழந்தைகளையும் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்ற சிவா தமது புகாரில் தெரிவித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள ரமணகரா காவல் நிலைய போலீசார், பிரேத பரிசோதனைக்காக, இரு குழந்தைகளின் உடலை தோண்டி எடுத்தனர். இக்கொலை சம்பவம் குறித்து ஸ்வீட்டி மற்றும் பிரான்சிஸ்சை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்த வருகின்றனர்.