தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தானில் எஸ்சிஓ மாநாடு: வந்து சேர்ந்த அழைப்பு.. செல்வாரா பிரதமர் மோடி..? - pakistan invites india sco summit

pakistan invites india for sco summit: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்) (credit - Modi x page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 12:41 PM IST

புதுடெல்லி: இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு அக்டோபர் 15,16 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் அரசு தலைவர்கள் குழுவுக்கு பாகிஸ்தான் தலைமை வகிக்கிறது. இதனால், அக்டோபரில் நடைபெறும் மாநாட்டிற்கு அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இந்தியா அதில் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை 4 ஆம் தேதி இந்தியா தலைமையில் நடந்த எஸ்சிஓவின் மாநாட்டில் காணொளி வாயிலாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஹெரிப் கலந்துகொண்டார். அதே ஆண்டில் கோவாவில் நடந்த எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ நேரடியாக கலந்துகொண்டார்.

இந்த நிலையில் வரும் அக்டோபரில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கிடையே நிதி, பொருளாதார, சமூக கலாச்சார மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் குறித்த ஆலோசனை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க உறுப்பு நாடுகளுக்கு மட்டுமின்றி, கூடுதலாக, ஈரான், பெலாரஸ் மற்றும் மங்கோலியா ஆகியவை பார்வையாளர் நாடுகளாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்சிஓ பாரம்பரியத்தின்படி, துர்க்மெனிஸ்தான் நாட்டுக்கும் விருந்தினர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டிற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, இந்தியாவிடம் இருந்து பதில் வந்ததும் தெரிவிக்கப்படும்'' என்றார்.

கடந்த 2022 செப்டம்பரில் நடைபெற்ற சமர்கண்ட் உச்சி மாநாட்டில், எஸ்சிஓ-வின் சுழற்சித் தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிவாஜி சிலை இடிந்து விழுந்த சம்பவம்; பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details