தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நவம்பர் 16: இன்று 'தேசிய பத்திரிகை தினம்' - ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? - THE NATIONAL PRESS DAY

நவம்பர் 16 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது. பத்திரிகையாளர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது? அதன் நோக்கம் என்ன என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2024, 11:49 AM IST

Updated : Nov 16, 2024, 12:04 PM IST

ஹைதராபாத்: 'பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா' தொடங்கப்பட்ட நாளான இன்று (நவ.16) நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கவுன்சில் முதன்முதலில் 1966 ஆம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அரை நீதித்துறை அமைப்பாக அமைக்கப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜே.ஆர்.முதோல்கர் தலைவராக இருந்தார்.

அதன் பின்னர் இந்த அமைப்பு பத்திரிகைத் துறையில் தொழில்முறை நெறிமுறைகளைப் பேணுவதற்கான சட்டப்பூர்வ அதிகார அமைப்பாக 1966 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா என மாற்றப்பட்டு பத்திரிகைகளின் சுதந்திரத்தை கண்காணிக்க தொடங்கியது.

அதன் முதல் இந்திய ஜனநாயகத்தில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகைகளை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ஆம் தேதி தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது. அத்துடன், பத்திரிகைகள் உயர் தரத்தைப் பேணுவதையும், எந்த ஒரு செல்வாக்கும், அச்சுறுத்தலும் பத்திரிகையை கட்டுப்படுத்தப்பட கூடாது என்பதை உறுதி செய்யும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் செயல்பாட்டை இந்த நாளில் நினைவுகூரப்படுகிறது.

பத்திரிகை தினத்தின் முக்கியத்துவம்:

  • ஜனநாயகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் பத்திரிகைகள் ஆற்றிய முக்கிய பங்கை நினைவுபடுத்தும் வகையில், தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ஜனநாயகத்தின் முக்கிய தூணாக சுதந்திரமான முறையில் பத்திரிகை செயல்படுகிறது. குடிமக்களுக்கு தேவையான தகவல்களை வழங்கி, ஊழல் மற்றும் குற்றங்களை அம்பலப்படுத்துவதோடு குரலற்றவர்களின் குரலாக பத்திரிகை செயல்படுகிறது.
  • நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்திலும், அதைத் தொடர்ந்து ஜனநாயக நாடாகப் பயணித்ததிலும் பத்திரிகைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன.
  • மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு அநீதியையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது பத்திரிகைகளின் குறிக்கோள்.

தேசிய பத்திரிகை தினத்தின்நோக்கம்:

பொறுப்பான பத்திரிகையின் பங்கை மதிக்க:இந்த நாள் இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகை இருப்பதைக் குறிக்கிறது. பத்திரிகை சுதந்திரம் மற்றும் சமூகத்திற்கான அதன் பொறுப்புகளை குறிக்கிறது. இந்த நாளில் தான் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா செயல்படத் தொடங்கியது.

பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்க:ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகிறது. பத்திரிக்கையாளர்கள் சமூகத்தின் கண்ணாடி என்றும், பத்திரிகையாளர்கள் பாதகமான சூழ்நிலையிலும் உண்மையை வெளிக்கொண்டு வருபவர்கள் என்பதை அங்கீகரிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த: வெளிப்படைத்தன்மையுடன், சுதந்திரமாக பத்திரிகைகள் இயங்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தை சமூகத்திற்கு உறுதிப்படுத்த.

இந்தியாவில் பத்திரிகை தொடர்பான சட்டங்கள்:இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் 19(1)(a) பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. இது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா சட்டம் 1978:பிரஸ் கவுன்சில் சட்டம், 1978 என்பது இந்தியாவில் பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்களின் தரத்தை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கத்திற்காக ஒரு பத்திரிகை கவுன்சிலை நிறுவுவதற்கான ஒரு சட்டமாகும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Nov 16, 2024, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details