தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் திடீரென முடங்கிய எக்ஸ்! என்ன காரணம்? - X Downs in india

பிரபல சமூக வலைதளமான எக்ஸ் இந்தியாவில் திடீரென முடங்கியதால் அதன் பயனர்கள் போஸ்ட், வீடியோ உள்ளிட்டவைகளை பதிவிட முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 4:06 PM IST

ஐதரபாத் : இந்தியாவில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (முன்னர் டிவிட்டர்) முடங்கியதால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். செல்போன் செயலி மற்றும் இணையதளம் என இரண்டிலும் எக்ஸ் பக்கத்தை பயனர்கள் அணுக முடியவில்லை.

எக்ஸ் தளத்தை அதன் பயனர்கள் அணுக முயற்சித்த போது "something went wrong. Try reloading" என திரையில் தோன்றியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திடீர் முடக்கத்திற்கு என்ன காரணம் என தெரியவராத நிலையில் எக்ஸ் தரப்பிலும் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

தலைநகர் டெல்லி, கொல்கத்தா, லக்னோ, கட்டாக், அகமதாபாத், மும்பை, ஐதராபாத், சண்டிகர் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து பயனர்கள் எக்ஸ் தளத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலை 11 மணி அளவில் இருந்து எக்ஸ் சமூக வலைதளம் சரிவர இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இதேபோல் எக்ஸ் சமூக வலைதளம் முடங்கியதால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். தற்போது நாடும் முழுவதும் உள்ள 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் 2ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் எக்ஸ் பக்கம் முடங்கி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

டிவிட்டரை 44 பில்லியன் டாலர் கொடுத்து விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் அதில் பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், எலான் மஸ்க் டிவிட்டர் வாங்கிய பின் அதிகளவில் முடங்கியதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 4 முறை வரை முடங்கியதாக கூறப்படுகிறது. நடப்பாண்டில் இது இரண்டாவது முறை என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க :நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details