ஹைதராபாத்:2024ஆம் ஆண்டின் நான்காவது பௌர்ணமியில் பிங்க் மூன் (pink moon) இன்று (ஏப்ரல் 23) காட்சியளிக்கிறது. பிங்க் மூன் வானத்தில் லிரிட் விண்கலத்துடன் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இணைந்திருப்பதால் ஜொலிக்கிறது.
இன்று (ஏப்ரல் 23) துல்லியமாக இரவு 7.49 மணி (ET), மற்றும் இந்திய நேரப்படி(IST) ஏப்ரல் 24ஆம் தேதி காலை 5.19 மணி ஆகிய நேரங்களில் பிங்க் மூன் தோன்றுகிறது. நாசாவின் கூற்றுப்படி, பிங்க் மூன் ஏப்ரல் 23ஆம் தேதி வரை மிகவும் பிரகாசமாக தோன்றும் எனவும், திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் பிங்க் மூனை பார்க்க முடிந்தாலும், செவ்வாய்க்கிழமையே பிங்க் மூனை பார்ப்பதற்கு சிறந்த நாள் என கூறியுள்ளது. செவ்வாயன்று பிங்க் மூன் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதால் அன்று பார்ப்பதற்கு சிறந்த நாள் என கருதப்படுகிறது.
பிங்க் மூன் என்பதற்கு பெயர் காரணம், அந்த நிலவு பிங்க் நிறத்தில் இருக்கும் என்பதில்லை. கிழக்கு வட அமெரிக்காவில் வசந்த காலத்தின் ஆரம்ப கட்டத்தில் moss pink என்ற மலர் பூக்கும். அதே காலகட்டத்தில் பிங்க் மூன் தோன்றும். இரண்டும் ஒரே நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் பிங்க் மூன் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் வசந்த காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் பிங்க் மூன், புதுப்பித்தல் மற்றும் புதிய ஆரம்பத்திற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. அதேபோல் லிரிட் விண்கல் இயற்கையின் அழகு, வானிலை அதிசயங்கள், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
பிங்க் மூன் பல கலாச்சார சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. உலகின் பல்வேறு சமூகத்தினர், பிங்க் மூனை கால மாற்றத்திற்கு ஏற்றார் போல் வித்தியாசமான பெயர்கள் வைத்து அழைக்கின்றனர். ஒக்லாலா சமூகத்தினர், red grass appearing moon எனவும், டிலிங்கிட்ஸ் சமூகத்தினர், sprouting grass moon எனவும், யூதர்கள், pink moon எனவும் அழைக்கின்றனர்.
இன்று (ஏப்ரல் 23) ஹனுமன் பிறந்தநாளாக கொண்டாடப்படும் ஹனுமன் ஜெயந்தி விழா அன்று பௌர்ணமி நாளாக அமைந்துள்ளது. ஆனால் இந்து சூரிய கால அட்டவணையில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. அதே நேரத்தில் இலங்கையில், பௌர்ணமி நாள் பாக் போயா என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் புத்தர் இலங்கைக்கு வருகை புரிந்து, தலைவர்களுக்கு இடையே போரை தவிர்க்க போராடியதை குறிப்பதாகும்.
இதையும் படிங்க: முல்லை பெரியாறு விவகாரத்தில் சர்வே ஆஃப் இந்தியா ஆய்வறிக்கையை ஏற்க முடியாது: தமிழக அரசு அதிரடி! - Mullaiperiyar Dam