மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜேபி நட்டா டெல்லியில் உள்ள பாஜக கட்சித் தலைமையகத்திற்கு வந்துள்ளார். மேலும், இந்த நிலையில் மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்கான கொண்டாட்டங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜக-வின் டெல்லி தலைமையகத்திற்கு வந்த ஜேபி நட்டா..! - ELECTION RESULTS TODAY LIVE
Published : Nov 23, 2024, 6:43 AM IST
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இதற்கான வாக்கு எண்ணும் பணி காலை 7 மணி முதல் தொடங்கவுள்ளது. இதேபோல, வயநாடு மாநிலங்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்கு எண்ணப்படுகிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி களம் கண்டுள்ளதால், தேசிய அளவில் அது கவனம் பெற்றுள்ளது.
LIVE FEED
பாஜக-வின் டெல்லி தலைமையகத்திற்கு வந்த ஜேபி நட்டா..
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்..!
மகாராஷ்டிராவில் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிருத்விராஜ் சவான், பாஜகவின் அதுல் போசலேவிடம் 38,545 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். அதேபோல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பாலாசாகேப் தோரட் சவான், சிவசேனாவின் அமோல் கட்டாலிடம் 10,560 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். மேலும், போர் தொகுதியில், என்சிபி வேட்பாளர் சங்கர் மண்டேகரை விட காங்கிரஸ் வேட்ப்பாளர் சங்ராம் தோபட்டே பின்தங்கியுள்ளார். தோபட்டேவை எதிர்த்து சங்கர் மாண்டேகர் 19,683 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
"முதலமைச்சர் பதவியில் எந்த முரண்பாடும் இல்லை முதலமைச்சரை கூட்டணி கட்சிகள் முடிவு செய்யும்" - தேவேந்திர ஃபட்னாவிஸ் பேட்டி!
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "முதலமைச்சர் பதவியில் எந்த முரண்பாடும் இல்லை, தேர்தலுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளான மூன்று கட்சிகளும் (பாஜக, சிவசேனா, என்சிபி) ஒன்றாக அமர்ந்து முதலமைச்சரை முடிவு செய்யும் என்பது முதல் நாளிலேயே தெளிவாகத் தெரிவித்துள்ளோம். எதிர்க்கட்சிகளை மகாயுத்தி மதிக்கும். மக்கள் தங்கள் ஆணையை வழங்கியுள்ளனர். என்சிபியின் அசல் அங்கீகாரம் அஜித் பவாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் எங்கள் சாதனையைப் பார்த்து வாக்களித்துள்ளனர். சிவசேனாவின் நியாயத்தன்மை ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாக்குகளாக வந்துள்ளது. மேலும், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா மகாயுதி வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மராட்டிய சமூகத்தினரும், ஓபிசி சமூகத்தினரும் எங்களுடன் உள்ளனர். நான் எந்த பழிவாங்கலும் செய்யவில்லை. அரசியலில் மக்கள் தங்கள் தலைவர்களை தேர்வு செய்துள்ளனர். நான் சாணக்கியன் அல்ல, சாதாரண கட்சிக்காரன்'' என்று தெரிவித்தார்.
"ஒவ்வொரு என்சிபி தொண்டர்களும் அஜித் பவாரை முதலமைச்சராக பார்க்க விரும்புகிறார்கள்" - ஜெய் பவார் பேட்டி!
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மகன் ஜெய் பவார் செய்தியாளர்களை சந்தித்தபோது, "2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றியைப் பதிவு செய்தது. நிச்சயமாக, அப்படித்தான் இந்த தேர்தலும் இருக்கும் என்று நான் உணர்கிறேன். அதேபோல என்சிபி தொண்டர்கள் எனது தந்தை முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர். நிச்சயமாக, நானும் அப்படித்தான் உணர்கிறேன். இருந்தாலும் அது குறித்த முடிவை, மூத்த தலைவர்கள் எடுப்பார்கள். ஆனால், ஒவ்வொரு என்சிபி தொண்டர்களும் தாதாவை (அஜித் பவார்) முதலமைச்சராக பார்க்க விரும்புகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
செலக்கரா தொகுதியில் எல்டிஎப் வேட்பாளர் யு.ஆர்.பிரதீப் வெற்றி!
செலக்கரா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எல்டிஎப் வேட்பாளர் யு.ஆர்.பிரதீப் 12,067 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பாலக்காட்டில் யுடிஎப் வேட்பாளர் ராகுல் வெற்றி!
- பாலக்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் யுடிஎப் வேட்பாளர் ராகுல் மம்கூட் 18724 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ராகுல் காந்தியை முந்திய பிரியங்கா!
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் பெரும்பான்மை வாக்குகளை கடந்த பிரியங்கா காந்தி 4,03,966 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்
வெற்றியை நெருங்கும் பிரியங்கா காந்தி
கேரளாவின் வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 2,39,554 வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை!
மேற்கு வங்கத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
கர்நாடகா இடைத்தேர்தல்: பாஜக கூட்டணி முன்னிலை!
கர்நாடகாவின் சந்தூர், ஷிக்கான், சன்னபட்னா ஆகிய 3 தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஷிக்கான், சன்னபட்னா ஆகிய இரண்டு தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. சந்தூர் தொகுதியில் காங்கரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
மேலும் அறிய: கர்நாடகா இடைத்தேர்தல்: மூன்றில் இரண்டு தொகுதியில் பாஜக கூட்டணி முன்னிலை!
வயநாட்டில் 1 லட்சம் வாக்குகளைக் கடந்த பிரியங்கா காந்தி!
வயநாடு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 1,00,451 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் முன்னிலை!
மொத்தம் 81 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை நோக்கி காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 54 இடங்களிலும், பாஜக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 26 இடங்களிலும், மற்றகட்சிகள் ஒரு இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிரா மாநில தேர்தல் முன்னிலை நிலவரம்!
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில், பாஜக சார்ந்த மகாயுதி கூட்டணி 145 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி 47 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பிற கட்சிகள் 18 இடங்களில் முன்னணியில் உள்ளன.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி முன்னிலை
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதல் பா.ஜ.க சார்ந்த மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் 288 சட்டப்பேரவையில் தொகுதிகளில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைத்து ஒரு அணியிலும், மறுபுறம், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகாயுதி கூட்டணியில் இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
முன்னிலையில் பிரியங்கா காந்தி
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி இரண்டாவது இடத்திலும், நவ்யா ஹரிதாஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.